பரீட்சை விதிமுறைகள்
- உங்கள் பரீட்சைகளுக்கு உரிய இணைப்புகள் எமது இந்த வலைத்தளத்தில் Home Page இல் குறித்த பரீட்சைத் தினங்களில் இடப்படும். நீங்களாகவே உங்கள் பரீட்சைகளுக்குரிய திகதிகளில், இந்த வலைத்தளத்தில், வந்து பார்த்து பரீட்சையில் பங்குபற்ற வேண்டும்
- வேறு இலவச Paper Explanation Classes போன்ற புதிய அறிவிப்புகளும் எமது இந்த வலைத்தளத்திலேயே அறிவிப்போம். தினமும் காலையில் தவறாது பாருங்கள்! நீங்கள் எவ்வளவு Serious ஆக பரீட்சையில் பங்குபெறுகிறீர்கள் என Random ஆக உங்கள் பெற்றோருக்கு தொலைபேசியில் Call செய்து கேட்டு அறிவோம். ஏதும் பிரச்சினைகள் இருப்பின் Whatsapp/Telegram இல் Message செய்யலாம். தயவுசெய்து Call எடுத்து தொந்தரவு செய்யவேண்டாம்.
- காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரையுமான காலப்பகுதியில் உங்களுக்கு தகுந்த நேரத்தில் வந்து பரீட்சையை எழுதலாம்
- பரீட்சை எழுதும் போது, உங்கள் சுட்டெண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி உள்நுழையலாம். பல முறை வேறு வேறு நேரங்களில் உங்கள் சுட்டெண் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது விதிமுறைகளை மீறுவதாக அமையும்
- பரீட்சை வினாத்தாளைக் கட்டணம் செலுத்தாத வேறு எவருடனும் பகிரக்கூடாது, அத்துடன் Screen shot எடுத்து எவருடனும் பகிர வேண்டாம். அவ்வாறு செய்வது, நீங்கள் செலுத்திய உங்கள் பெற்றோரின் பெறுமதியான பணத்தை வீணடிப்பது போல் ஆகிவிடும்.
- இதுவரை பரீட்சையில் கட்டணம் செலுத்தி இணையாத உங்கள் நண்பர்களும் பரீட்சை நடக்கும் நாட்களிலும் புதிதாக கட்டணம் செலுத்தி இணையலாம். அவர்களுக்கும் நீங்கள் செய்யும் சகல பரீட்சைகளையும் அவர்களும் செய்வதற்கான வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
- பரீட்சையை உரிய Time இற்குள் செய்யல் வேண்டும். அதுவே உங்கள் பயிற்சிக்கும் நன்று! (2021 - 3hrs, 2022 - 2hrs)
- பகுதி 1 இற்கான விடைகளை Manual ஆக நாம் திருத்திய பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு பரீட்சை நாள் அன்று இரவு 8 மணிக்கு அனுப்பிவைப்போம். பகுதி 2 இன் விடைகளையும், இணைந்த கணிதம் எடுக்கும் மாணவர்கள் அனைத்து விடைகளையும், Paper இல் எழுதி பெற்றோரின் உறுதிப்படுத்தலுடன் எமது superaexam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.
- பரீட்சை நடந்து 4 நாட்களின் பின்னர் பகுதி2 இன் விடைகள் எமது வலைத்தளத்தில் பதிவிடப்படும். அவ்விடைகளை நீங்கள் பார்த்து சுயமதிப்பீடு செய்து கொள்ளவேண்டும்.
- சகல பரீட்சைகளும் முடிந்த பின்னர், Rank List இடப்படும். உரிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். (ஒழுங்கமைப்பாளர்களின் முடிவே இறுதியானதாகும்)
மேற்குறித்த விதிமுறைகளை மீறும் மாணவர்கள் எச்சரிக்கப்படுவர். மீண்டும் மீறினால், பரிட்சைகளில் இருந்து விலக்கபடக் கூடும். ஆகவே தயவாக அனைத்தையும் பின்பற்றுங்கள்!..
"பயிற்சியும் முயற்சியும் செய்து சாதனையாளராகுங்கள்"
Post a Comment